கீழ்க்காணும் பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை தருக
விரிவான கருத்தைச் சுருக்கிச் சொல்வதே பழமொழியின் சிறப்பு. சான்றாக, "சுத்தம் சோறு போடும்" என்னும் பழமொழி தரும் பொருளைக் காண்போம். சுத்தம் நோயற்ற வாழ்வைத் தரும். உடல்நலமே உழைப்புக்கு அடிப்படை. உழைத்துத் தேடிய பொருளால் உணவு, உடை, உறைவிடம் ஆகியவற்றைப் பெறுகிறோம். இவை அனைத்திற்கும் சுத்தமே அடிப்படை. இவ்விரிந்த கருத்து சிறு அடிக்குள் அடங்கியுள்ளது.
கோடிட்ட இடத்தை நிரப்புக ??
1. பழமொழியின் சிறப்பு _____ சொல்வது.
அ) விரிவாகச்
ஆ) சுருங்கச்
இ) பழைமையைச்
ஈ) பல மொழிகளில்
விடை: சுருங்கச்
2. நோயற்ற வாழ்வைத் தருவது ____.
விடை: சுத்தம்
3. உடல்நலமே ____ அடிப்படை.
விடை: உழைப்புக்கு
4. உழைத்துத் தேடிய பொருளால் நாம் பெறுவன யாவை?
விடை: உணவு, உடை, உறைவிடம்