6th Standard Book Back Questions
1) பிறமொழிக் கலப்பின்றிப் பேசுக
1. எங்க ஸ்கூல்லே சுற்றுலா கூட்டிட்டுப் போறாங்க.
விடை: எங்கள் பள்ளியில் சுற்றுலா அழைத்துக் கொண்டு போகிறார்கள்.
2. பெற்றோரிடம் பர்மிசன் லெட்டர் வாங்கி வரச் சொன்னாங்க.
விடை: பெற்றோரிடம் அனுமதி கடிதம் வாங்கி வரச் சொன்னார்கள்.
2) சொல் வளம் பெறுவோம்
1. கீழ்க்காணும் சொற்களில் உள்ள எழுத்துகளைக் கொண்டு புதிய சொற்களை உருவாக்குக:
- கரும்பு - கரு, கம்பு
- கவிதை - கவி, விதை, கதை, தை
- பதிற்றுப்பத்து - பதி, பத்து, பற்று
- பரிபாடல் - பரி, பாடல், பா, பால், பாரி
2. இரண்டு சொற்களை இணைத்துப் புதிய சொற்களை உருவாக்குக
நீங்கள் இணைக்க வேண்டிய சொற்கள்:
நூல், மொழி, கோல், மீன், நீதி, எழுது, கண், வெளி, தமிழ், மணி, மாலை, விண்
எடுத்துக்காட்டு: விண் + மீன் = விண்மீன்
3) கலைச் சொல் அறிவோம்
- வலஞ்சுழி - Clockwise
- இடஞ்சுழி - Anti-clockwise
- இணையம் - Internet
- குரல்தேடல் - Voice Search
- தேடுபொறி - Search Engine
- முகநூல் - Facebook
- தொடுதிரை - Touch Screen
- புலனம் - Whatsapp
- செயலி - App
- மின்னஞ்சல் - E-mail