வளர்தமிழ் Part 8

Exam Focus
0
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

1. 'தொன்மை' என்னும் சொல்லின் பொருள்.
  • அ) புதுமை
  • ஆ) பழமை
  • இ) பெருமை
  • ஈ) சீர்மை

விடை: ஆ) பழமை

2. 'இடப்புறம்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது.
  • அ) இடன் + புறம்
  • ஆ) இடை + புறம்
  • இ) இடம் + புறம்
  • ஈ) இடப் + புறம்

விடை: இ) இடம் + புறம்

3. 'சீரிளமை' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது.
  • அ) சிறு + இளமை
  • ஆ) சீர்மை + இளமை
  • இ) சீரி + இளமை
  • ஈ) சீற் + இளமை

விடை: ஆ) சீர்மை + இளமை

4. சிலம்பு + அதிகாரம் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்.
  • அ) சிலம்பதிகாரம்
  • ஆ) சிலப்பதிகாரம்
  • இ) சிலம்புதிகாரம்
  • ஈ) சில பதிகாரம்

விடை: ஆ) சிலப்பதிகாரம்

5. கணினி + தமிழ் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்.
  • அ) கணினிதமிழ்
  • ஆ) கணினித்தமிழ்
  • இ) கணிணிதமிழ்
  • ஈ) கனினிதமிழ்

விடை: ஆ) கணினித்தமிழ்

6. "தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்" என்று பாடியவர் யார்?
  • அ) கண்ணதாசன்
  • ஆ) பாரதியார்
  • இ) பாரதிதாசன்
  • ஈ) வாணிதாசன்

விடை: ஆ) பாரதியார்

7. 'மா' என்னும் சொல்லின் பொருள் என்ன?
  • அ) மாடம்
  • ஆ) வானம்
  • இ) விலங்கு
  • ஈ) அம்மா

விடை: இ) விலங்கு

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!